ஜி-பே செயலியில் விரைவில் "ஹிங்லிஷ்" அறிமுகம்
பணப் பரிமாற்றத்திற்கான ஜி-பே செயலியில், விரைவில் இந்தியும் ஆங்கிலமும் கலந்த "ஹிங்லிஷ்" அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பணப் பரிமாற்றத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிக்கு உதவிடும் வகையில், ஏற்கனவே, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 இந்திய மொழிகளில் ஜி-பே சேவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக "ஹிங்லிஷ்" மட்டுமின்றி, பணம் பெறுவரின் வங்கி கணக்கு எண்ணை, இந்தி அல்லது ஆங்கிலத்தில், வாய்மொழியிலேயே கூறி, அதை சரிபார்த்த பின்னர், பணம் அனுப்பிடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Comments